Rig Veda, Mandala 1, Suktam 1 (1-9)

பராசக்தியே அனைத்து உயிர்களுக்கும் ஒளியானவள்

Tuhan adalah Cahaya bagi Semua Makhluk

God is the light of all beings

அக்னிமீலே புரோஹிதம் யஜ்நஸ்ய தேவம்ர்த்விஜம் |

ஹோதாரம் ரத்னடதாமம் ||1.1.1.1||

எந்த தேவியானவள், அனைத்து உயிர்களுக்கும் ஒளியாக விளங்குகின்றாளோ, அந்த பராசக்தியை, பரப்பிரஹ்மத்தை, என் உள்ளத்தில் நினைத்து, நான் வணங்குகின்றேன்.

அவளே ஸ்வயம் ப்ரகாசமாக இந்த ஜகத்தை பரிபாலிக்கின்றவள், அனைத்திற்கும் முதன்மையானவள், உயிர்களுக்கு ஊக்கமளிப்பவள், உயிர்களின் செயல்கள் மற்றும் அதன் விளைவுகளினால் விரியும் இந்த ஶ்ருஷ்டியின் மீது தன் அருளை செழுத்துபவள், இந்த ஜகத்தின் அண்ட இயக்கவியல் மற்றும் இயற்கை பரிணாமத்தை கட்டுப்படுத்துபவள். அவனே இந்த வாழ்வின் வளங்களை அள்ளிக்கொடுப்பவள்.

Saya bertafakur dan menyerahkan diri kepada Tuhan yang Maha Esa, Pemberi Cahaya Kehidupan kepada semua makhluk, Penguasa Tunggal Alam Semesta, Pemimpin dan Penginspirasi Terunggul, menerangkan penciptaan ini yang berfungsi dan diperbuat atas hukum karma (tindakan dan akibatnya), Pengawal Tertinggi dinamik kosmik dan evolusi semula jadi, Sesungguhnya Dialah Yang Maha Pemurah lagi Maha Pemberi Khazanah Kehidupan.

I invoke and worship, The Lord, The Light of all lives, Self Refulgent Lord of the universe, Foremost Leader and Inspirer, blazingly light of this creation made of karmic yajna (actions and it's consequences), High Controller of cosmic dynamics and natural evolution and The Most Generous Giver of the life treasures.

அக்னிஹ் பூர்வேபிர் ரிஷிபிரிட்யோ நூதனைருத |

ஸ தேவான் ஏஹ வக்ஷதி ||1.1.1.2||

பரப்ரஹ்மமான பராசக்தியானவள், பேரருள் மற்றும் பேர்சக்தி வாய்ந்த இறைவியாவாள். தொன்மை மிகு காலம் தொட்டு நவீன காலம் வரை உள்ள ரிஷிகளாலும் அறிஞர்களாலும் என்றும் வணங்ககூடியவள். இவ்வுலகில் நமக்கு, அனைத்து மார்கத்தின் இறைவி தேவி ஒருவளே என்ற ஸத்யத்தை தெளிய தெய்வீக பார்வையையும் மற்றும் ஞானத்தையும் தந்து, ஹிந்து தர்மத்தையும் ஸத்யத்தையும் நாம் கடைப்பிடித்து தர்மத்தின் வழி தவறாமல் செல்ல மன வலிமையையும் தந்து அவன் அருள்புரிவாளாக.

Dia, Tuhan Yang Maha Esa, Penguasa cahaya dan kuasa, disembah dan dipuji oleh orang-orang kudus dan cendekiawan zaman dahulu dan moden. Semoga Dia memberkati kita dengan penglihatan ilahi serta pengetahuan (untuk mengetahui bahawa Dia adalah Tuhan kepada semua agama dan jalan kepercayaan) dan kuasa (untuk berpegang teguh kepada kebenaran) di dunia ini hingga akhir.

The God, Lord of light and power, has always been praised by saints and scholars of ancient and modern times. May He bless us with divine vision, knowledge (to know that He is the Lord of all religions and paths) and power (to hold fast to the truth) in this world until the end.

அக்னிநா ரயிமஸ்நவத் போசமேவ திவேதிவே |

யசசம் வீரவத்தமம் ||1.1.1.3||

பேரொளியும் பேராற்றலும் நிறைந்த பராசக்தியின் அருளால், ஒருவன் ஆரோக்கியத்திலும் செல்வத்திலும், நாளுக்கு நாள் முன்னேறி, உயர்ந்த வீரர்களுக்கு ஒப்பான மரியாதையையும் புகழையும் பெறுகின்றான்.

Dengan rahmat Tuhan, Yang Memiliki Cahaya Tertinggi dan Kuasa Tertinggi, seseorang bertambah maju dalam kesihatan dan kekayaan, hari demi hari, dan diberkati dengan kehormatan dan kemasyhuran seperti golongan pahlawan tertinggi.

By the virtue of God, The Supreme Light and The Energy of the universe, one advances in health and wealth, day by day, blest with honour and fame of the highest order of heroes.

அக்னே யம் யஜ்நமத்வரம் விஸ்வதஹ் பரிபுரசி |

ச இட்டேவேசு கச்சதி ||1.1.1.4||

அன்னையே, பராசக்தியே! நடைபெறும் யாகங்கள் முழுவதும் நீ ஊடுருவி, அன்பு, இறக்கம், படைப்பு முதலிய வகைகளுக்கு நீ பாதுகாப்பையும் ஊக்கத்தையும் தருகின்றாய். இயற்கை மற்றும் மனிதகுலத்தின் உன்னத சக்திகளுக்கு மத்தியில், யாகங்கள் அனைத்தும் முன்னேறி விரிவடையட்டும்.

Wahai Tuhan kami, Yang Meresap ke dalam yajna, Engkaulah Pelindung dan Pendorong segala tindakan pengorbanan, cinta, belas kasihan dan penciptaan. Semoga yajna maju dan berkembang di kalangan kuasa alam dan kemanusiaan yang paling mulia.

The God, pervasive of yajna, You are all round Protector and Promoter of all sacrificial acts of love, compassion and creation. May the yajna advance and expand among the noblest powers of nature and humanity.

அக்னிர் ஹோதா கவிக்ரதுஹ் சத்யஸ் சித்ரஸ் ரவஸ்தமஹ் |

தேவோ தேவே பிரா கமத் ||1.1.1.5||

அந்த பராசக்தி, ஸ்வயமாக ஒளிர்பவள். இயற்கையை முழுவதுமாக கட்டுப்படுத்துபவள். கட்டமைக்கப்பட்ட கவிதை போல் உருவாக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவள். அவளின் பெருமைகள், பெறுமை வாய்ந்ததும் பிரமிக்க வைப்பதும் ஆகும். அவள், நமது வாழ்வில், வாழ்க்கையின் உன்னத வரங்களை அளித்து அருள்புரிவாளாக!

Wahai Tuhan kami, Penguasa Alam Semesta dan Yang Maha Mulia, Pengawal Alam yang Tinggi, Pencipta Alam Semesta yang indah ini yang telah diciptakan seperti syair yang tersusun, Sesungguhnya Dia Mahal Menakjubkan dan Maha Berkumandang. Semoga Dia memberkati kita dengan anugerah kehidupan yang paling mulia.

The God, Self Refulgent Lord of The Universe, High Controller of Nature, Creator of this beautiful universe which has been made like a structured poem, He is Wondrous and The Most Resounding. May He come and bless us with the noblest gifts of life.


யடங்க தாசுசே த்வமக்நே பத்ரம் கரிஷ்யசி |

தவெத் தத் சத்யம் அங்கிரஹ் ||1.1.1.6||

அந்த பராசக்தி, அனைத்து உயிர்களின் ஜீவநாடியாக திகழ்பவள். நிச்சயமாக அவள், தாராள மனப்பான்மை உள்ளவர்களுக்கும், பிறருக்கு கொடுத்து உதவி புரிபவர்களுக்கும், நல்லதையே செய்வாள். வாழும் உயிர்களுக்கு உயிர்வளி எப்படி நெருங்கியதாக இருக்கின்றதோ, அதுபோல அவளும் நல்லதையே புரிபவர்களுக்கு எப்பொழுதும் துணையாக திகழ்கின்றாள். இதுவே அவளின் இறை தன்மை. இதுவே எப்பொழுதும் ஸத்யம்.

Tuhan Yang Maha Esa, Penjaga Segala Kehidupan, pasti Dia akan berbuat baik kepada mereka hang pemurah dan sentiasa memberi kepada orang lain. Rapatnya sebagai nafas kehidupan mereka, ini adalah benar tentang sifat Ilahiyyah Tuhan.

The God, The Life of All Lives, surely He would do good to the person who is generous and giving to others. Dear as the breath of life, this is ever true of the Lord's divine nature.

உப த்வாக்நே திவேதிவே தோசாவஸ்தர்தியா வயம் |

நமோ பரந்த ஏமசி ||1.1.1.7||

பராசக்தியே! அனைத்தும் அறிந்தவளே! இரவும் பகலும் அனுதினமும், எங்களின் முழு இதயத்துடனும், ஆன்மாவுடனும், நம்பிக்கையுடனும், பணிவுடனும், பக்தியுடன் உன்னிடம் வருகின்றோம்.

Ya Tuhan, Yang Maha Mengetahui, setiap hari, siang dan malam, dengan segenap hati dan jiwa kami, kami datang kepada-Mu, dengan pengabdian penuh, iman dan kerendahan diri.

Oh God, The Omniscient, day by day, night and day, with all our hearts and soul, we come to you, bearing gifts of homage, in faith and humility.

ராஜன்த மத்வரானாம் கோபாம்ருதஸ்ய டீடிவிம் |

வர்தமானம் ஸ்வே தமே ||1.1.1.8||

பராசக்தியே, ஸ்வயமாக ஒளிர்பவளே, அன்பு மற்றும் இரக்கத்தினால் செய்யப்படும் மனிதர்களின் தன்னலமற்ற செயல்களை ஆள்பவளே! பூமி மற்றும் சுற்றுச்சூழலின் ரக்ஷகியே! உன்னுடைய இந்த ஜகத்தோடு விரிவடையும் உந்தன் வேத ஞானத்தை ஒளிப்பெற செய்பவளே! உன்னிடம், பக்தியுடனும், ஷ்ரத்தையுடனும் வந்து சரணடைகின்றோம்.

Dengan pengabdian, iman dan kerendahan hati, kami datang kepada-Mu, Tuhan Yang Maha Esa, Yang Maha Menerangi, Penguasa segala tindakan pengorbanan makhluk yang dilakukan dengan cinta dan belas kasihan, Pelindung bumi dan alam sekitar, Penerang firman Ilahi, Veda dan hukum alam, yang terus berkembang dengan alam luas ciptaan-Mu sendiri.

Bearing gifts of homage with faith and humility, we come to the God, The Self-Refulgent Ruling Lord of sacrificial acts of love and compassion, Protector of the earth and the environment, Illuminator of the divine word, Veda and the universal law, immanently growing with the expansive universe of His own creation.

ஸா நாஹ் பிதேவ சூனவேக்நே சூபாயனோ பவ |

சசஸ்வா நாஹ் ஸ்வஸ்தயே ||1.1.1.9||

ஒரு தகப்பன் தன் குழந்தையுடன் எப்போதும் அன்பில் ஒன்றாக இருப்பதைப் போல, எல்லா உயிர்களுக்கும் இறைவியாகிய பராசக்தி, மகத்தான பேரோளியானவள், தனது குழந்தைகளுக்கு ஒரு தந்தையைப் போல படைப்பாளரும் பாதுகாவலருமான அவள், எப்போதும் அன்பிலும் ஆசீர்வாதத்திலும் நம்முடன் இணைபிரியாமல் இருக்கட்டும். அனைத்து உயிர்களுக்கும் அன்னையே! தந்தையே! தெய்வீக வாழ்வின் அருளை எங்களுக்குத் தருவாயாக.

Sebagaimana seorang bapa sentiasa bersama-sama dengan anaknya disebabkan kasih sayang yang mendalam, demikian juga semoga Tuhan, Pencipta segala yang hidup, Cahaya Teragung, Pencipta dan Penjaga ciptaan-Nya seperti Bapa kepada Anak-Nya, sentiasa dekat dengan kita dalam kasih dan berkat. Bapa (Penjaga) kami semua, berikanlah kami rahmat kehidupan ilahi.

As a father is ever one with his child in love, so may The God, The Lord of all lives, The Great Light, The Creator and Guardian of His creation like a Father to His Child, be ever close to us in love and benediction. Father of us all, give us the grace of life divine.